சுரக்ஷா காப்புறுதி மாணவர்களுக்கு முக்கியமானது என்பதால் எவ்வித குளறுபடிகளும் இன்றி அதனை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றினூடாக அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
நடுத்தர வகுப்பு குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட மிக முக்கியமான காப்புறுதித் திட்டம் இது எனவும் கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த திட்டத்தை அமுல்படுத்தும் போது ஏற்பட்ட குறைபாடுகளை நிவர்த்தித்து, பயன்பெறும் வகையில் காப்புறுதி திட்டத்தை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
நான்கு மில்லியனுக்கும் அதிக மாணவர்களுக்காக அமுல்படுத்தப்பட்டுள்ள சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை அரசாங்கம் இரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக வௌியான தகவல் முற்றிலும் பொய்யானது என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment