தபால் அலுவலகங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 5, 2019

தபால் அலுவலகங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் தபால் அலுவலகங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தபால் அட்டைகளை விநியோகிக்கும் 2192 தபால் நிலையங்களுக்கு இவ்வாறு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் 75 வீதம் நிறைவடைந்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாக்காளர்கள் அட்டைகள் எதிர்வரும் 9ஆம் திகதி வரை வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் என பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க கூறியுள்ளார். இதற்காக 8000 ஊழியர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்காளர் அட்டைகள் இதுவரை கிடைக்கப் பெறாதவர்கள், அருகிலுள்ள தபால் நிலையங்களுக்குச் சென்று தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க இதன்போது தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment