49 இராணுவ வீரர்களை பலிகொண்ட மாலி தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு - News View

About Us

About Us

Breaking

Monday, November 4, 2019

49 இராணுவ வீரர்களை பலிகொண்ட மாலி தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு

49 இராணுவ வீரர்களை பலிகொண்ட மாலி நாட்டில் இராணுவ சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர்.

மாலி நாட்டின் மேனகா பிராந்தியத்தில், இன்தெலிமான் என்ற இடத்தில் இராணுவ சோதனைச் சாவடியில் கடந்த 1ஆம் திகதி பயங்கரவாதிகள் புகுந்து துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வெடித்தும் நடத்திய அதிபயங்கரத் தாக்குதல்களில் 53 இராணுவ வீரர்கள் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் கூறின.

இந்த தாக்குதலில் 49 இராணுவ வீரர்கள் பலியானதாக இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் அறிக்கையில், “மாலியில் இன்தெலிமானில் இராணுவ சோதனைச் சாவடியில் நமது போராளிகள் தாக்குதல்கள் நடத்தி உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் பிரான்ஸ் இராணுவ வீரர் ஒருவரும் பலியாகி இருப்பது இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக மாலி அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரான்ஸ் ஆயுதப்படைகள் துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்லி, மாலிக்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment