அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 60ம் கட்டை ஊரணி காணி கோரிக்கையாளர்கள் கடந்த வருடம் ஆரம்பித்த நில மீட்பு போராட்டத்திற்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்காவின் ஆலோசனைகளுக்கு ஏற்ப பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜின் முயற்சியால் காணி கோரிக்கையாளர்களின் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜின் நேரடி கண்காணிப்பின் ஊடாக பொத்துவில் பிரதேச செயலக காணிப் பிரிவின் உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஆகியோரின் முன்னிலையில் ஊறணி 60ஆம் கட்டை காணி கோரிக்கையாளர்களின் ஆவணங்கள் நேற்றுமுன்தினம் (01) பரிசீலிக்கப்பட்டுள்ளன.
காணி உரிமம் தொடர்பான ஆவணங்கள் முறையாக பரிசீலனை செய்யப்பட்டு வருவதுடன் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட காணி கோரிக்கையாளர்கள் வருகைதந்து தமது ஆதாரங்களை பிரதேச செயலாளரிடம் முன்வைத்திருந்தனர்.
எமது காணியை எமக்கு தாருங்கள், எமது நிலமீட்பு போராட்டத்திற்கு நல்லதொரு தீர்வை அரசாங்கம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி பொத்துவில் கனகர் கிராம மக்கள் வீதியோரம் தற்காலிக கொட்டகை அமைத்து நில மீட்பு போராட்டத்தினை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருக்கோவில் நிருபர்
No comments:
Post a Comment