முல்லைத்தீவு நீதிமன்றத்தின் கட்டளையை அவமதித்து சட்டத்தை கையில் எடுத்த ஞானசார தேரரையும் அவரின் தலைமையிலான இனவெறிக் கும்பலின் உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி எதிர்வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு யாழில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக நடைபெறவுள்ள இப் போராட்டத்தில் பேதங்களின்றி அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நீதிகோரி முன்னெடுக்கப்படுகின்ற இவ் ஆர்ப்பாட்டமானது கட்சி அரசியலையும் கலக்காமல் பொது மக்கள் ஆர்ப்பாட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளது.
பருத்தித்துறை விசேட நிருபர்
No comments:
Post a Comment