எஸ்.எம்.எம்.முர்ஷித்
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஓட்டமாவடி - 02 கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாலர் பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வு இடம்பெற்றது.
பாலர் பாடசாலையின் நிர்வாக சபைத் தலைவர் எம்.சலாம் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து சபையின் தலைருமான எம்.வி. முஸம்மில், வாழைச்சேனை பொலிஸ் நிலைய சிறுவர், மகளிர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம். ரஸாக், கலாநிதி எஸ்.ஏ.ஹர்பான், மாவட்ட அமைப்பாளரின் இளைஞர் அமைப்பாளர் ஏ.எஸ். அரூஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது சிறுவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment