எஸ்.எம்.எம்.முர்ஷித்
செவ்வாய்க்கிழமை (01.10.2019) சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் வாரத்தினை முன்னிட்டு “பிள்ளைகளின் வெற்றிக்கான நட்பான நாடு” “முதியோர்களான உங்களுக்கு சம உரிமை வழங்கும் நாளைய தினத்தை நோக்கி” என்ற தொனிப்பொருளில் இவ்வருடம் நாடலாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்று வருகின்றது.
அதன் அடிப்படையில் ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் வார நிகழ்வும் “வேர்கள்” சஞ்சிகையின் 14வது வெளியீடும் மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அப்கர், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எப்.எஸ்.எம்.வஸீம், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எல்.மஜீத், சமுக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஜெயசேகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பிரதேச பாடசாலை மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றதோடு சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் வாரத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதோடு பிரதேசத்தின் சிரேஷ்ட பிரஜைகள் பத்து பேரும் கௌரவிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment