ட்விற்றர் மற்றும் ட்வீட்-டெக் சேவைகளில் இன்று காலை முதல் தடங்கல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 2, 2019

ட்விற்றர் மற்றும் ட்வீட்-டெக் சேவைகளில் இன்று காலை முதல் தடங்கல்

ட்விற்றர் மற்றும் ட்வீட்-டெக் சேவைகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இன்று (02) காலை முதல் ட்விற்றர் பயனர்கள், ட்விட்டர் தளம் (Twitter), ட்வீட்-டெக் (Tweetdeck) ஆகிய தளங்களை அணுகுதல் மற்றும் ட்வீட்களை இடுதல், பெறுதல், தனிப்பட்ட செய்திகளை (Direct Messages) பார்வையிடல் உள்ளிட்ட விடயங்களை மேற்கொள்ள முடியாத நிலையை எதிர்கொண்டுள்ளனர்.

அத்துடன் ட்வீட் செய்யும் போது, படங்கள், வீடியோக்கள் கருத்துக்கணிப்புகளை இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரிவித்துள்ள ட்விற்றர், "ட்விற்றர் (Twitter) மற்றும் ட்வீட்டெக் (Tweetdeck) தளத்தின் செயலிழப்புகள் குறித்து நாம் அறிகின்றோம். ட்வீட் செய்வது, அறிவிப்புகளை பெறுவது (Notifications), தனிப்பட்ட செய்திகளைப் (DM) பார்வையிடுவதில் நீங்கள் சிக்கல்களை எதிர்கொண்டிருக்கலாம். நாங்கள் தற்போது இதனை சரி செய்வதற்கு முயற்சி செய்து வருகிறோம் என்பதால் விரைவில் இயல்பு நிலை ஏற்படும்” என தங்களது ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

ஆயினும் இந்த செயலிழப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து எந்த தகவலையும் ட்விற்றர் தளம் தெரிவிக்கவில்லை. உலகளாவிய ரீதியில் ஜப்பான், கனடா, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து இணையத்தள செயலிழப்புகளை கண்காணிக்கும் வலைத்தளமான Outage.report இற்கு 4,000 இற்கும் மேற்பட்டோர் தகவல் அழித்துள்ளனர்.

ஆரம்பத்தில், ட்வீட்டெக் தளத்தில் சிக்கல்கள் காணப்படுவதாகவும் அது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும், ட்விற்றர் பிரதிநிதி ஒருவர் தெரிவித்திருந்தார். பல ட்விட்டர் கணக்குகளின் ட்வீட்களைக் கண்காணிப்பதற்கான தளமான ட்வீட்டெக் ஆனது, ஊடவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் ஏனைய படைப்பாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment