உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் இருபது பேரின் கட்சி உறுப்புரிமையை ரத்துச் செய்ய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு முடிவு செய்துள்ளது.
சுதந்திரக் கட்சி மத்திய குழு ஜனாதிபதி தலைமையில் நேற்று முன்தினம் இரவு கூடியது. இதன் போது கட்சி முடிவுக்கு மாற்றமாக செயற்பட்ட 16 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையைத் தற்காலிகமாக ரத்து செய்து ஒழுக்காற்று விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டதாக அதன் செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.
இது தவிர, வேறு கட்சியில் அங்கத்துவம் பெற்ற ஆரச்சிக்கட்டு, பொல்கஹவல உறுப்பினர்கள் இருவரையும் மாவனல்ல பிரதேச சபை உறுப்பினர்கள் இருவரையும் கட்சியில் இருந்து நீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர, தேசியப்பட்டியலூடாகத் தெரிவாகி வேறு கட்சியுடன் செயற்படும் 6 பாராளுமன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் இரு வாரங்களில் விளக்கம் வழங்க அவர்களுக்கு கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
கட்சியில் சகலருக்கும் ஒரே சட்டமே அமுல்படுத்தப்படுகிறது. கட்சியுடன் இணைந்து செயற்படுமாறு உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் முதல் எம்.பிக்கள் அனைவரையும் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஷம்ஸ் பாஹிம்
No comments:
Post a Comment