ஜனாதிபதித் தேர்தலை தடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 3, 2019

ஜனாதிபதித் தேர்தலை தடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, காலி மாநகர முன்னாள் மேயர் மெத்சிறி டி சில்வா இன்று உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

எதிர்வரும் 7 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரும் செயற்பாட்டை நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவு பிறப்புக்குமாறும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவை நாட்டு மக்கள் 6 வருடங்களுக்கே ஜனாதிபதியாக தெரிவு செய்ததாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், அவர் ஜனாதிபதியாகத் தெரிவாகி 5 வருடங்களின் பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு வரத்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்காக வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக நிறுத்துமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களும் சட்ட மா அதிபரும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment