எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்பகிஷ்கரிப்பை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாக, இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
சம்பள பிரச்சினை தொடர்பில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்ட தீர்வு தொடர்பில் கலந்துரையாடி முடிவொன்றுக்கு வரும் வரை குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
No comments:
Post a Comment