ரயில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 2, 2019

ரயில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை

சுகயீன விடுமுறையென அறிவித்து சேவைக்கு சமூகமளிக்காத ரயில் சாரதிகள், ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் சேவையை கைவிட்டுச் சென்றுள்ளதாக கணிக்கப்படும் என, ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெனாண்டோ தெரிவித்தார்.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து ரயில்வே தொழிற்சங்கங்கள் கடந்த 07 நாட்களாக பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றன.

பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ள நிலையிலேயே ரயில்வே திணைக்களத்தினால் குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment