இம்ரான் கான் மாதிரியான தலைவராக செயற்பட இருக்கின்றேன் சஜித் - எம்மைப் போன்று சாதாரண ஓர் இல்லத்தில் அவர் வாழ்ந்து வருகின்றார் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 1, 2019

இம்ரான் கான் மாதிரியான தலைவராக செயற்பட இருக்கின்றேன் சஜித் - எம்மைப் போன்று சாதாரண ஓர் இல்லத்தில் அவர் வாழ்ந்து வருகின்றார்

இன மத முரண்பாடுகளுக்கு இடமளிக்காது சகல மக்களையும் சமனாக மதித்து ஒழுக்க நெறியில் நாட்டை முன்கொண்டு செல்லவுள்ளதாக, ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாஸா உறுதியளித்துள்ளதாக, மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் பொதுச் செயலாளர் நாயகம் கணேஸ்வரன் வேலாயுதம் தெரிவித்தார்.

மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் பொதுச் செயலாளர் நாயகம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போதே அவர் இவ்வாறு உறுதியளித்தார்.

இச்சந்திப்புக் குறித்து கருத்து தெரிவித்த கணேஸ்வரன் வேலாயுதம் எமது நாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் போன்றதொரு நல்ல தலைவர் வருவதற்கு 10 வருடம் எடுக்கலாம் என்று நான் மனதில் கருதியிருந்தேன். ஆனால், உண்மையிலேயே ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடைய இல்லம் சென்று பார்த்தவுடன் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. எம்மைப் போன்று சாதாரண ஓர் இல்லத்தில் அவர் வாழ்ந்து வருகின்றார்.

அப்போது தான் கூட ஒரு இம்ரான் கான் மாதிரியான தலைவராக செயற்பட இருக்கின்றேன் என்றும் அமைச்சர் சஜித் எம்மிடம் கூறினார். நாட்டின் இறையாண்மையுடன் உயர்ந்த பச்ச அதிகாரப் பகிர்வை ஏற்படுத்தி அமைதி, நல்லிணக்கம், நிலைபேறான நாடொன்றை உருவாக்குவதற்கான உறுதியான எண்ணப்பாடுகள் அவரிடம் உள்ளன. 

தன்னுடைய தந்தை தமிழ் மக்களுக்கு எதைத் தீர்வாக வழங்க இருந்தோரோ அந்தத் தீர்வை தான் தமிழ் மக்களுக்குவழங்கத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

வெற்றி பெற்றாலும் ஜனாதிபதி மாளிக்கைக்குச் செல்வதில்லை. நான் வசிக்கின்ற இல்லத்திலேயே தம்முடைய கடமைகளைக் மேற்கொள்ள இருப்பதாக வலியுறுத்திக் கூறிய அவர், இலங்கையிலுள்ள ஜனாதிபதி மாளிகைள் எல்லாம் சர்வதேச தரத்திலான தகவல் தொழில் நுட்ப பல்கலைக்கழகமாகவும், கனணி ஆய்வு ஆராய்ச்சி கூடங்களாகவுமாகவும் மாற்றியமைக்கப்படும் என்றார்.

மாவத்தகம நிருபர்

No comments:

Post a Comment