ரயில்வே ஊழியர்களுடன் நடத்தப்பட்ட பேச்சவார்த்தைகளுக்கு ஏற்ப பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது - சங்கங்கள் மறுத்தால் மாற்று நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 1, 2019

ரயில்வே ஊழியர்களுடன் நடத்தப்பட்ட பேச்சவார்த்தைகளுக்கு ஏற்ப பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது - சங்கங்கள் மறுத்தால் மாற்று நடவடிக்கை

ரயில்வே ஊழியர்களுடன் நடத்தப்பட்ட பேச்சவார்த்தைகளுக்கு ஏற்ப அமைச்சரவையில் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதாகவும், இதனை ஏற்பதற்குச் சங்கங்கள் மறுக்குமாயின் அரசாங்கம் மாற்று நடவடிக்கையை மேற்கொள்ளுமென்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்தார்.

அவர்களின் கோரிக்கைக்கு இணங்க ஒரேயடியாக அவர்களுக்கு சம்பளத்தை அதிகரித்தால் நாட்டில் 5 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க நேரிடும். எனினும், நாம் அவர்ளுக்கென விசேட நடைமுறையொன்றை ஏற்படுத்தவே தீர்மானித்திருந்தோம். அதனை அவர்கள் ஏற்காவிட்டில் அவர்கள் விருப்படியே போராட்டத்தைத் தொடரட்டும். அதற்காக மக்கள் பாதிப்படைய இடமளிக்க முடியாது. நாம் மாற்று வழியை ஏற்படுத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார். 

நேற்றைய தினம் அமைச்சரவையில் ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக்கப்பட்டு தொழிற்சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாது போனால், எம்மால் எதுவும் செய்ய முடியாது. 

அத்தியாவசிய சேவையாக ரயில் சேவைகள் பிரகடனப்படுத்திய பின்னர் அவர்களுடன் தனிப்பட்ட ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி சம்பள முறைமையொன்றை ஏற்படுத்திக்கொள்வதே எமது நோக்கமாக இருந்தது. எனினும், அவர்கள் அதற்கு இணங்காமல் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.

தொழிற்சங்கப் போராட்டம் தொடருமானால் இராணுவத்தினரை வைத்து ரயில் சேவை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவிக்கப்படுகிறதே? என வினவிய போது:

இல்லை. அவ்வாறு எந்தத் தீர்மானமும் இல்லை. இராணுவத்தினரை வைத்து ரயில்களை செலுத்த முடியாது. அதற்கு மாற்று நடவடிக்கையொன்றை நாம் மேற்கொள்வோம்.

நேற்று முன்தினம் தொழிற்சங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் காணப்பட்ட இணக்கப்பாட்டுக்கிணங்க நாம் எமது செயற்பாட்டை மேற்கொண்டுள்ளோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment