தமிழ் மக்களுக்கு நன்மை ஏற்படும் வகையிலான எந்தவொரு பணிகளையும் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள் செய்ததில்லை எனவும், மாறாக மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி தமிழர்களின் வாக்குகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவிக்கின்றது.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்த அந்த கட்சியின் உறுப்பினர் டலஸ் அழகபெரும இதனைக் குறிப்பிட்டார்.
இந்தியாவின் தலையீட்டில் தமிழர்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் ஸ்தாபிக்கப்பட்ட மாகாண சபைகளில், வட மாகாணத்திற்கான தேர்தல் மாகாண சபை ஸ்தாபிக்கப்பட்டு 26 வருடங்களின் பின்னரே நடைபெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்பதனை அறிந்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனநாயகத்தை ஸ்தாபிப்பதற்காக வட மாகாணத் தேர்தலை நடத்தியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால் தமிழர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கருத்துரைக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.
தமிழர்களின் அதிகாரத்தை பெற்றுக் கொடுப்பதற்காகவே பணியாற்ற வேண்டுமே தவிர, தேர்தலை இலக்காக கொண்டு பணியாற்றக் கூடாது என டலஸ் அழகபெரும தமிழ் அரசியல்வாதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிபிசி தமிழ்
No comments:
Post a Comment