பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
எம்பிலிப்பிட்டிய மாஜிஸ்திரேட் நீதவான் கே.பி. ஆர்.எல்.விதானகமகே முன்னிலையில் நேற்று சட்டத்தரணிகள் சகிதம் ஆஜரானதையடுத்து இவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
எம்பிலிப்பிட்டிய பிரதேசத்திலுள்ள கட்டடமொன்றின் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த இரண்டு தடவைகள் இவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமையால் இவருக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது.
இவ்வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு பிரதேச பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதவான் பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(இரத்தினபுரி நிருபர்)
No comments:
Post a Comment