சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ராஜரட்ணத்தை பதில் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிப்பதற்கு பொதுச் சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Avant Garde வழக்கின் பிரதிவாதியான Avant Garde Maritime Services நிறுவனத்தின் தலைவர் நிஷ்ஷங்க சேனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியமை, தொழில் தர்மத்தை மீறிய செயல் என குற்றஞ்சாட்டப்பட்டு தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment