முன்னாள் அமைச்சரும், லங்கா சமசமாஜக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவருமான அதாவுத செனவிரத்ன மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் அநுராதபுர மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டப்ளியூ.பி. ஏகநாயக்க ஆகியோர் தமது ஆதரவை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த இருவரும் கடந்த பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இன்றையதினம் (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், தாம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாஸவுக்கு தமது ஆதரவை வழங்குவதாக அறிவித்தனர்.
No comments:
Post a Comment