அனைவரையும் அனுசரித்துச் செல்ல வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாகும் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 2, 2019

அனைவரையும் அனுசரித்துச் செல்ல வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாகும்

(ஐ.ஏ. காதிர் கான்)
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது இந்த நாட்டில் மிகப் பிரபல்யமான ஒரு கட்சியாகும். இந்தக் கட்சி தொடர்பில் எவருக்கும் விமர்சனம் செய்ய முடியாது என, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

இராஜகிரியவிலுள்ள அவரது அலுவலகத்தில் இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, (02) புதன்கிழமை மாலை இடம்பெற்றது. 

இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இந்தக் கட்சி யாருக்கு தனது ஆதரவை வழங்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது. அண்மையில் ஜனாதிபதி குருநாகலில் நடைபெற்ற நிகழ்வில் எதனைக் கூறினாரோ, அதனையே நானும் இன்று உங்கள் முன் நிலையில் கூறுகின்றேன். 

எமக்கு எவருடனும் எதிர்ப்போ, குரோதங்களோ கிடையாது. அனைவரையும் அனுசரித்துச் செல்ல வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும். ஜனாதிபதியினது கருத்தும் இதுவாகும். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவை வழங்குவதா இல்லையா...? என்பது குறித்த இறுதித் தீர்மானத்தை எதிர்வரும் 5 ஆம் திகதி வழங்கவுள்ளோம்.

அதில் நாங்கள் சிறந்த முடிவை எடுக்கவுள்ளோம். எமது கட்சி அமைச்சர்களுக்கு மாத்திரம் ஒதுக்கப்பட்ட கட்சியல்ல. அப்படியான நிலைப்பாடு எதுவும் எம்மிடமில்லை. 

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் முதல் கட்சி அமைப்பாளர்கள் வரையிலான அனைவரும் எமது கட்சியின் செயற்பாடுகளை சிறந்த முறையில் முன்னெடுத்து வருகின்றனர். இது எமக்கு பெருமையளிக்கின்றது என்றார்.

No comments:

Post a Comment