பயங்கரவாத தாக்குதல் : அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை திகதியை அறிவித்தது நீதிமன்றம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 2, 2019

பயங்கரவாத தாக்குதல் : அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை திகதியை அறிவித்தது நீதிமன்றம்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மனுக்களும் எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தீர்மானித்தது.

உச்ச நீதிமன்றத்தின் 7 நீதியரசர்களைக் கொண்ட குழு இதனை நேற்று (02) தீர்மானித்தது. 

இக் குழுவில் பிரதம நீதியரசர் ஜயலத் ஜயசூரிய, நீதியரசர்கள் புவனேக அலுவிகாரை, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, எல்.டி.பி. தெனிதெனிய மற்றும் முர்கு பெர்ணான்டோ ஆகியோர் உள்ளடங்கினர்.

இவ் வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டவர்கள் எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் தமது ஆட்சேபனைகளை தெரிவிக்க வேண்டுமென்றும், அதற்கான எதிர் ஆட்சேபனைகளை மனுதாரர்கள் எதிர்வரும் டிசம்பர் 6ஆம் திகதிக்கு முன் தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் நேரடியாக அல்லது மறைமுகமாக பொறுப்பானவர்கள் கைது செய்யப்படவேண்டுமென்றும் சட்ட மா அதிபர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பலதரப்பினர் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமைகள் மனுக்களில் கூறப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment