4 மாத காலத்திற்கு இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 2, 2019

4 மாத காலத்திற்கு இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் வரை 4 மாத காலத்திற்கு இடைக்கால கணக்கறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

நவம்பர் 16 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த யோசனைக்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

இது தொடர்பில் கடந்த ஓகஸ்ட் 3 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானம் எடுத்திருந்தது. இதன் பிரகாரம் 2020 ஜனவரி ஒன்று முதல் ஏப்ரல் 30 வரை 4 மாத காலத்திற்கு அரச பணிகளைத் தொடர்வதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் அடங்கிய இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிப்பது தொடர்பில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்தார். இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது.

No comments:

Post a Comment