யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமின் இராணுவக் காவலரணில் கடமையிலிருந்த கடற்படைச் சிப்பாய் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
இச் சம்பவம் நேற்றுக் காலை இடம்பெற்றது. இதில் 21 வயதான நிசாந்த என்ற சிப்பாயே படுகாயமடைந்ததாக என வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த துப்பாக்கி சூட்டுக்காயத்தால் சிப்பாயின் கால் ஒன்று சிதைவடைந்துள்ளதுடன், இடுப்புப் பகுதியிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அவர் சுயநினைவற்ற நிலையில் உள்ளதால் சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
யாழ்.விசேட நிருபர்
No comments:
Post a Comment