வவுனியாவில் அமைக்கப்படவுள்ள கண் மருத்துவமனைக்கு, தென்னிந்தியப் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நேற்று (04) அடிக்கல் நட்டுவைத்தார்.
வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் 150 மில்லியன் ரூபா செலவில், ஆனந்தி கண் மருத்துவமனை என்ற பெயரில் இவ்வைத்தியசாலை நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வு இலண்டனைச் சேர்ந்த வேலாயுதம் சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கலந்துகொண்டு அடிக்கல்லை நட்டு வைத்தார்.
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பாரியாரும் இதில் கலந்துகொண்டார். வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா, பிரதேச செயலாளர் க. உதயராசா, வவுனியா நகர சபையின் உப நகரபிதா கெ.குமாரசிங்கம், வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கோவில்குளம் குறூப் நிருபர்
No comments:
Post a Comment