இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் 27 ஆம் திகதி இந்தியாவின் விசாகப்பட்டினம் நகரத்துக்கு மேற்கொள்ளப்பட்ட விமானப் பயணமானது இரத்மலானையில் இருந்து மேற்கொள்ளப்பட்ட முதலாவது சர்வதேச பயணிகளின் ஒப்பந்த பயணமாகும்.
பிட்ஸ் எயார் நிறுவனம் அதன் விமானத்தின் மூலம் இந்த விமானப் பயணத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த வகையில் பிட்ஸ் எயார் நிறுவனம் உள்ளூரின் தனியார் வர்த்தக விமான கைத்தொழில் துறையின் அபிவிருத்திக்கு முக்கிய பங்காற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காலை 6 மணிக்கு இரத்மலானையில் இருந்து புறப்பட்ட விமானம் குறிப்பிட்ட நேரமான காலை 9 மணி 10 நிமிடத்துக்கு முன்பதாகவே விசாகப்பட்டிணத்தை சென்றடைந்தது.
இரத்மலானை மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையங்களில் இருந்து உள்ளூர் விமான நிலையங்களுக்கு லிட்ஸ் எயார் நிறுவனம் பயணிகள் விமானப் பயணங்களை மேற்கொண்டு வருகிறது.
No comments:
Post a Comment