தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சஜித் பிரேமதாசவோ, கோட்டாபயவோ எவ்வித உறுதிகளையும் தரவில்லை. நாம் யாருக்கு வாக்களிப்பதென்றோ அல்லது வாக்களிக்காமல் விடுவதென்றோ இன்னும் முடிவெடுக்காத நிலை காணப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
தியாகதீபம் திலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் கூறுகையில், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் போது ஜனாதிபதியாக இருந்த பிரேமதாச அதனை விரும்பவில்லை. குறித்த ஒப்பந்தத்தில் அவர் பங்கு பெறவும் இல்லை. ஒப்பந்தம் தொடர்பாக வெளியான புகைப்படங்களில் அவர் இருக்கின்றதற்கான படங்கள் இல்லை. இந்நிலையில் தற்போது அவரது மகன் சஜித் பிரேமதாச தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
இதுவரை தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சஜித் பிரேமதாசவோ, கோட்டாபயவோ எவ்வித உறுதிகளையும் தரவில்லை. நாம் யாருக்கு வாக்களிப்பதென்றோ அல்லது வாக்களிக்காமல் விடுவதென்றோ இன்னும் முடிவெடுக்காத நிலை காணப்படுகின்றது.
நாவற்குழி பகுதியில் சிங்கள குடியேற்றம் இடம்பெற்றது. சிங்கள மக்களை வலுக்கட்டாயமாக அங்கு குடியேற்றினர்.
பரந்தன் குறூப் நிருபர்

No comments:
Post a Comment