எனக்கும் பிரதமருக்குமிடையில் கசப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக காட்ட சிலர் எத்தனிக்கின்றனர் - கண்டி தொரகமுவையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விளக்கம் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 22, 2019

எனக்கும் பிரதமருக்குமிடையில் கசப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக காட்ட சிலர் எத்தனிக்கின்றனர் - கண்டி தொரகமுவையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விளக்கம்

நாச்சியாதீவு பர்வீன்
நாங்கள் எதிர்பார்க்கும் ஜனாதிபதி வேட்பாளரை அடுத்த வாரத்திற்குள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்து, இந்த தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள உதவுவாரென நம்புதாகவும், அரசாங்கத்தில் எங்களுக்குள் வாதப்பிரதிவாதங்கள் நடப்பது சகஜமானது என்பதுவும் பிரதமருக்கு அது நன்றாகவே தெரியுமென்றும், நான் உணர்ச்சி வசப்பட்டு பேசுவதெல்லாம் எங்கள் மத்தியில் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் தக்கவைத்து முரண்பாடுகளை கலைவதற்காகவே. நான் உணர்ச்சிவசப்படும்போதெல்லாம் பிரதமர் எனக்கு ஆறுதல் கூறி அமைதிப்படுத்தியிருக்கிறார். எனக்கும் பிரதமருக்குமிடையில் கசப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக காட்ட சிலர் எத்தனிக்கின்றனர். என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார். 

கண்டி வடக்கு மற்றும் பாத்ததும்பர பிரதேசத்திற்கான ஒன்றிணைந்த பாரிய நீர் வழங்கல் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு தோரகமுவையில் சனிக்கிழமை (21) நடைபெற்றபோது பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதில் பிரதம ஆதியாக கலந்துகொண்டார். பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்ட அந்நிகழ்வில் உரையாற்றும்போதே அமைச்சர் ஹக்கீம் இதனை கூறினார்

அமைச்சர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்ததாவது பிரதமர் ரனில் விரமசிங்க சர்வதேசம் ஏற்றுக்கொண்ட ஒரு தலைவர் ஆவார். அவரொரு அரசியல் ஞானியாவார். 
ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சியில் அமர்த்தும் நீண்ட பயணத்தில் நாங்கள் பல தியாகங்களை செய்துள்ளோம். அதில் குறிப்பிடத்தக்கதொன்றாக 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது இந்த பாத்ததும்பர தொகுதியில் 10 உயிர்களை நாங்கள் இழந்திருக்கிறோம். இவையெல்லாம் பிரதமருக்கு தெரியாத விடயங்களல்ல.

கண்டி மாவட்டத்தின் பாரிய நீர் வழங்கல் திட்டமான கண்டி வடக்கு, பாத்ததும்பர ஒன்றிணைந்த நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் 320 கிராம சேவகர் பிரிவினை சேர்ந்த 117 500 குடும்பகளுக்கான தூய குடிநீரை வழங்க முடியும். இதன் மூலம் சுமார் ஐந்து இலட்சம் (500,000) பயனடையவுள்ளனர். இலங்கை அரசினதும் சீன எக்சிம் வங்கியினதும் நிதிப்பங்களிப்பில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. 

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான லக்ஷமன் கிரியெல்ல,எம்.எச்.ஏ.ஹலீம்,மலிக் சமரவிக்ரம மற்றும் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் ருவீனஸ் ஆகியோர் உட்பட பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment