அம்பாரை மாவட்டத்திலுள்ள இளைஞர்களுக்கு ஜப்பான் நாட்டில் தொழில் வாய்பை பெற்றுக் கொடுக்க - அமைச்சர் பைசல் காசிம் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, September 22, 2019

அம்பாரை மாவட்டத்திலுள்ள இளைஞர்களுக்கு ஜப்பான் நாட்டில் தொழில் வாய்பை பெற்றுக் கொடுக்க - அமைச்சர் பைசல் காசிம் நடவடிக்கை

தொழில் வாய்ப்புக்களை மையப்படுத்தி ஜப்பானுடன் இலங்கை இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டமைக்கமைவாக வெளிநாட்டு வேலைவாய்பு பணியகத்தினால் ஜப்பான் நாட்டிற்கு (NVQ) தேசிய தொழில் தகைமைக்கான சான்றிதலுள்ள 10 ஆயிரம் தொழில் திறமையுள்ள இளைஞர் யுவதிகளை வேலைக்கு அனுப்பும் அரசாங்கத்தின் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இத்திட்டதின் கீழ் அம்பாரை மாவட்டத்திலுள்ள இளைஞர்களை ஜப்பான் நாடு செல்வதற்கான வாய்பை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தலைமையில் நிந்தவூர் மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் போதனாசிரியர் எம்.எம்.உதுமாலெப்பையினால் தேசிய தொழில் தகைமைக்கான சான்றிதழின் தேவைப்பாடு பெறுமுறை தொடர்பாக விளக்கமளித்தார்.

நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினரும் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியோக செயலாளருமான எம்.எம்.எம்.அன்சார், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம்.ஜாரீஸ் இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் போதனாசிரியர் ஏ.எல்.எம்.இமாம், உள்ளிட்ட இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதில் 400ற்கு மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு தமது தொழில் தகைமைகளை சமர்பித்தார்கள்.

No comments:

Post a Comment