தென் மாகாணத்தில் இருந்து மேலும் 700 பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ள இருப்பதாக தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர தெரிவித்தார்.
முன்னாள் மாகாண சபை ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், நான் கடந்த 19 வருடங்களாக தென் மாகாண சபையில் பல பதவிகளை வகித்துள்ளேன். ஆளுநராக சிறிய காலமே பதவியில் இருந்தாலும் தென்பகுதி மக்களுக்காக முழுமையாக சேவையாற்றுவேன்.
கடந்த காலத்தில் மாகாண சபையில் இருந்தபோது வரவு செலவுத் திட்டங்களை வெல்வதற்கு பங்களித்தேன். காணி அமைச்சராக இருந்தபோது அதிகமானவர்களுக்கு காணி உறுதிகள் வழங்கினேன்.
தோல்வியின் வேதனையை நான் நன்கு உணர்ந்தவன். எனது அரசியிலில் பலிவாங்கல் கிடையாது. தெற்கில் சிறந்த அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் எடுக்கும் முடிவுகள் தொடர்பில் அவதானமாக இருக்கிறேன்.
தவறான முடிவுகள் இருந்தால் அவர்களை அழைத்து கலந்துரையாடுவேனே தவிர கோபப்பட்டு சத்தம் போட மாட்டேன். அதிகாரிகளை மாற்றவும் மாட்டேன். வரலாற்றில் அதிகமான மக்கள் ஆளுநரை சந்திப்பதற்காக தற்காலத்திலே வருகின்றனர்.
மாகாண சபைக்கு மேலதிக நிதி பெறுவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறேன். கடந்த 4-5 மாதங்களில் நடந்த சில சம்பவங்கள் காரணமாக மாகாண சபைக்கு நிதி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த கால தவறை திருத்தி முன்னோக்கி செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்றும் அவர் குறினார்.
No comments:
Post a Comment