வட மாகாண சுகாதாரப்பணி உதவியாளர் நியமனங்களில் அரசியல் தலையீடுகள் - பாதிக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 4, 2019

வட மாகாண சுகாதாரப்பணி உதவியாளர் நியமனங்களில் அரசியல் தலையீடுகள் - பாதிக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டம்

வட மாகாண சுகாதார பணி உதவியாளர் நியமனத்தில் பாரிய குளறுபடிகள் நடந்துள்ளதாக பாதிக்கப்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம் (05) இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ள நிலையிலே, பாதிக்கப்பட்டோர் இக்குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

வடக்கில் யுத்தம் நிலவிய சூழ்நிலையில் சம்பளமின்றிப் பணியாற்றிய, சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கும் நடவடிக்கைகள் 2009 க்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்டன. சேவையாற்றிய காலங்களின் அளவைக் கொண்டு, காலமூப்பின் அடிப்படையில் இவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படுகின்றன.

இந்த நியமனங்களில், கிளிநொச்சி மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தகுதியானோர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அரசில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதால் சேவையாற்றாதோரும் இந்நியமனங்களில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் அரச வேலைக்கான உள்ளீர்ப்புத் திட்டத்தில் சுகாதாரத் துறை உதவியாளர்களாக நியமனம் பெறுவதற்கான அடிப்படைத் தகமை க.பொ.த சாதரண தரமாக உயர்த்தப்பட்டது.

இப்புதிய நியமன நடைமுறையால் பாதிக்கப்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் தொடர்ச்சியாக நடாத்திய போராட்டங்களை அடுத்து, மனிதாபினமான அடிப்படையில் முன்பிருந்த அரச உள்ளீர்ப்புக் கொள்கையின்படி ஆண்டு எட்டு கல்வியை தகுதியாகக் கொண்டு நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்படி 850 சுகாதாரத் தொண்டர்களது பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட்டு அனுமதியும் பெறப்பட்டது. இருப்பினும் வடக்கின் அரச உயரதிகாரிகள் அரசாங்கத்தின் புதிய அரச வேலை உள்ளீர்ப்புத் திட்டத்தின்படியே இந்த ஆட்சேர்ப்பு நடக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். இது தங்களைப் பாதித்துள்ளதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர

No comments:

Post a Comment