தேர்தலுக்கு குந்தகம் ஏற்படுத்தும் ஊடகங்கள் மீது கடுமையான நடவடிக்கை - ஆணைக்குழு தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Friday, September 27, 2019

தேர்தலுக்கு குந்தகம் ஏற்படுத்தும் ஊடகங்கள் மீது கடுமையான நடவடிக்கை - ஆணைக்குழு தீர்மானம்

ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில் தனியார் ஊடகங்களின் செயற்பாடுகள் நீதியான, நேர்மையான தேர்தலுக்கு பாதகமான விதத்தில் அமையுமாக இருந்தால் சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனம் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 

அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தொலைக்காட்சி சேவை, வானொலி நிறுவனங்களில் பொறுப்பு அரச நிறுவனத்திடமே இருக்கின்றது என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார். 

அந்த நிறுவனங்களை பொதுமக்களின் சொத்தாகவே கவனத்தில் கொள்ளப்படும். அந்தச் சொத்தை கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொண்டதன் மூலம் அந்த ஊடகங்கள் நூறு வீதம் உரிமை பாராட்ட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். 

தேர்தல் காலத்தில் ஏதேனுமொரு தனியார் இலத்திரனியல் ஊடகம் ஒலி, ஒளிபரப்பும் செய்தியின் மூலம் அல்லது வெளியிடப்படும் தகவல் மூலம், நிகழ்ச்சியின் மூலம் நீதியான நேர்மையான தேர்தலுக்கு அச்சுறுத்தலோ, பாதிப்போ ஏற்படுமானால் அது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

எனவே அரச மற்றும் தனியார் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களுக்கும் ஏனைய ஊடகங்களுக்கும் பெற்றுக்கொடுக்கப்பட்டிருக்கும் ஊடக வழிகாட்டலுக்கமைய அனைத்து ஊடக நிறுவனங்களும் செயற்படவேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். 

எம்.ஏ.எம். நிலாம்

No comments:

Post a Comment