எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கைக்கு அமைய மக்கள் வங்கி திருத்த சட்டமூல விவாதம் ஒத்திவைப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 3, 2019

எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கைக்கு அமைய மக்கள் வங்கி திருத்த சட்டமூல விவாதம் ஒத்திவைப்பு

மக்கள் வங்கிக்கான திருத்த சட்டமூலம் தொடர்பான இன்றைய பாராளுமன்ற விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவின் கோரிக்கைக்கு அமைய இந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதமர், சபை முதல்வர் மற்றும் ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஆகியோருக்கு பிரதியிட்டு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தினூடாக எதிர்க்கட்சித் தலைவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மக்கள் வங்கிக்கான திருத்த சட்டமூலம் தொடர்பில் வங்கித்துறை நிபுணர்கள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயங்களைக் கருத்திற்கொண்டு விவாதத்தை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஆளும் கட்சி, இந்தச் சட்டமூலத்தை எதிர்வரும் 19 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, இன்றைய பாராளுமன்ற அமர்வின்போது பிரதமரிடம் கேள்விகளை முன்வைப்பது தொடர்பில் ஒழுங்குப் பத்திரத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment