மஹிந்த, கோட்டாபய, பெசில் ஆகியோர் மைத்திரியுடன் சந்திப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, September 27, 2019

மஹிந்த, கோட்டாபய, பெசில் ஆகியோர் மைத்திரியுடன் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோர் இன்று (28) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடக பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் நேற்று (27) இரவு இடம்பெற்றிருந்த நிலையில், இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படக்கூடும் என எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

இதன்போது, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள ´சின்னம்´ தொடர்பில் விசேடமாக அவதானம் செலுத்தப்படக் கூடும் என சுதந்திர கட்சியின் ஊடக பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment