கல்முனை சாய்ந்தமருது பகுதிகளில் இராணுவம் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, September 27, 2019

கல்முனை சாய்ந்தமருது பகுதிகளில் இராணுவம் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கை

பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தின் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவம் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

இராணுவத்தினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து இரு ட்ரக் வண்டிகளில் சுமார் 50க்கும் அதிகமான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குறித்த தேடுதலில் ஈடுபட்டனர்.

வெள்ளிக்கிழமை (27) மாலை 4 மணி முதல் குறித்த தேடுதல் நடவடிக்கையானது முன்னெடுக்கப்பட்டதுடன் கல்முனை சாய்ந்தமருது பகுதி எல்லையில் அமைந்துள்ள மையவாடி மற்றும் தனியார் மரக்காலைகளில் ஸ்கானர் இயந்திரங்களை பயன்படுத்தி இராணுவத்தினரால் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் குறித்த பகுதி வீதிகள் இராணுவத்தினரால் போக்குவரத்திற்காக மறிக்கப்பட்டதுடன் செய்தி சேகரிப்பிற்காக சென்ற ஊடகவியலாளர்கள் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

எனினும் எதுவித ஆயுதங்களோ தடயப்பொருட்களோ குறித்த தேடுதலில் சிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment