எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக களமிறங்கும் வேட்பாளர் நாட்டு மக்களின் முழுமையான ஆதரவைப் பெற்று அமோக வெற்றிபெறுவார் என்றும் இதனை எச்சக்தியாளும் தடுத்து நிறுத்த முடியாது என பேருவளை ஐக்கிய தேசிய கட்சி பிரதம அமைப்பாளர் இப்திகார் ஜமீல் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ஐக்கிய தேசிய கட்சிக்கு மிகவும் இலகுவாக தோற்கடிக்க முடிந்த வேற்பாளராக கோடபாய ராஜபக்ஷவை குறிப்பிடலாம்.
ஒரு உள்ளுராட்சி சபையில் கூட பிரதிநிதித்துவம் வகிக்காத அரசியல் அனுபவம் இல்லாத அவரினால் எவ்வாறு நாட்டை ஆழ முடியும். பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி வகித்த அவருக்கு நாட்டை வழிநடத்தக் கூடிய தகுதி இல்லை.
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் மூவின மக்களின் பேராதரவுடன் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் வரலாறு காணாத வெற்றியை ஈட்டுவார். ராஜபக்ஷ குடும்பத்தில் எவர் போட்டியிட்டாலும் ஐக்கிய தேசிய கட்சிக்கு எந்தவிதமான சவாலும் இருக்காது.
அதேபோல், ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மைச் சமூகங்களின் ஆதரவின்றி எந்த வேற்பாளரும் வெற்றி பெறமுடியாது என்றார்.
எந்தவொரு அரசின் ஆட்சியிலும் நடைபெறாத அபிவிருத்திப் பணிகள் இன்றைய ஆட்சியின் கீழ் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மக்களின் பேராதரவு உள்ளதாள் இனிவரும் தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சிக்கு மிக இலகுவாக வெற்றி பெறும் வாய்ப்பு உண்டு என்றும் அவர் மேலும் கூறினார்.
பேருவளை விஷேட நிருபர்
No comments:
Post a Comment