கண்டி மாவட்டத்தில் 2015ஆம் ஆண்டு முதல் இதுவரை 12,000 வீடுகள் நிர்மாணம் - News View

About Us

About Us

Breaking

Friday, September 27, 2019

கண்டி மாவட்டத்தில் 2015ஆம் ஆண்டு முதல் இதுவரை 12,000 வீடுகள் நிர்மாணம்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் கண்டி மாவட்டத்தில் 2015ஆம் ஆண்டு முதல் இதுவரை 12,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கண்டி மாவட்ட முகாமையாளர் ஏ.டீ.எம்.யூ.எம்.பீ. தென்னகோன் தெரிவித்தார்.

கண்டி திகனையில் அமைந்துள்ள விக்டோரியா கிளப் ஹவுஸில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார். தேசிய வீடமைபபு அபிவிருத்தி அதிகார சபைக்கு 40 ஆண்டுகள் பூர்த்தியடைவதையிட்டு இவ்ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.  ​

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட கடன் மற்றும் உதவிகளைக் கொண்டு இவை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

மாவட்ட முகாமையாளர் மேலும் தெரிவிக்கையில், அனைவருக்கும் வீட்டு வசதியை பெற்றுக் கொடுக்கும் ‘சகலருக்கும் வதிவிடம்’ என்ற நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் மூலம் 40 ஆண்டுகளாக பல இலட்சம் வீடுகளை நாடளாவிய ரீதியில் நிர்மாணித்துள்ளது.  

கண்டி மாவட்டத்தில் 20 பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளடக்கி பல வீட்டுத் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்டதாகவும், இதுவரை 42 புதிய கிராமங்கள் நிர்மாணிக்கப்பட்டதாகவும் அதில் ஐந்து கிராமங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய கிராமங்கள் விரைவில் திறக்கைவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

அதே போன்று கண்டி மாவட்டத்தில் வாழும் மத்திய வருமானத்தை கொண்டவர்களுக்காக 300 வீடுகளைக் கொண்ட மாடி வீட்டுத் திட்டம் ஒன்று குண்டசாலை பகுதியிலும் 106 மாடி வீடுகளைக் கொண்ட திட்டம் ஒன்று ஹந்தானை பிரதேசத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

அதே நேரம் இந்திய உதவியுடன் குண்டசாலை பிரதேசத்தில் 25 வீடுகளைக் கொண்ட ஒரு கிராமம் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் மேலும் இரு கிராமங்கள் அண்மையில் திறந்து வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

இராணுவ வீரர்களுக்காக முற்றிலும் இலவச உதவியுடன் கண்டி மாவட்டத்தில் 83 வீடுகளும், சிறு நீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 69 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(​எம்.ஏ. அமீனுல்லா)

No comments:

Post a Comment