உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு புத்தளம் மாவட்டத்தில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் அதிகரித்து, ஒரு இனம் இன்னொரு இனத்தை சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்ற நிலை, குறிப்பாக அரச திணைக்களங்களில் இந்நிலை உக்கிரமடைந்து காணப்படுகின்றது.
எனவே இந்நிலைமையை சீரமைத்து, இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக, புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸின் ஆலோசனையின் பேரில், புத்தளம் நகர சபை எல்லைக்குட்பட்ட சகல அரச திணைக்களங்களினதும் உத்தியோகத்தர்கள், ஊழியர்களையும் ஒன்றிணைத்து முழுநாள் விளையாட்டுப்போட்டி ஒன்றை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்ட செயலகம் இதற்கான ஏற்பாடுகளை, புத்தளம் நகர சபையின் பூரண ஒத்துழைப்போடு ஏற்பாடு செய்கின்றது. இது தொடர்பான கலந்துரையாடல் புத்தளம் மாவட்ட செயலாளர் மற்றும் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
No comments:
Post a Comment