பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகள் பர்தாவினை கழற்றத் தேவையில்லை : பரீட்சைகள் ஆணையாளர் - News View

About Us

About Us

Breaking

Monday, August 5, 2019

பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகள் பர்தாவினை கழற்றத் தேவையில்லை : பரீட்சைகள் ஆணையாளர்

2019ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (உயர் தரப்) பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகள் பர்தாவினை கழற்றத் தேவையில்லை என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார்.

இது தொடர்பில் தேவையான அனைத்து அறிவுறுத்தல்களையும் பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நிட்டம்புவ உள்ளிட்ட சில பகுதிகளில் பர்தாவை கழற்றி விட்டு உயர் தரப் பரீட்சைக்கு தோற்ற வருமாறு வற்புறுத்தப்பட்ட சம்பவங்கள் இன்று (05) திங்கட்கிழமை இடம்பெற்றதாக சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டன.

இதனையடுத்து பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜிதவினை தொடர்புகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கல்வி பொதுத் தராதர (உயர் தரப்) பரீட்சை இன்று ஆரம்பமாகின. நிட்டம்புவ பிரதேசத்தில் இந்த பரீட்சைக்கு தோற்றச் சென்ற முஸ்லிம் மாணவிகள் பர்தாவினை கழற்றத் தெரிவிக்கப்பட்டதாக எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகள் பர்தாவினை கழற்ற வேண்டிய எந்தத் தேவையுமில்லை. இது தொடர்பில் தேவையான அனைத்து அறிவுறுத்தல்களையும் பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு வழங்கியுள்ளேன். ஆனால், பரீட்ச்சார்த்திகள் அனைவரும் தங்களின் காதினை வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.

றிப்தி அலி

No comments:

Post a Comment