நீர்கொழும்பில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து அங்குள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களை தற்காலிகமாக மூடுமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.
கட்டுவப்பிட்டிய புனித செபஸ்தியன் உருவச் சிலைக்கு மர்மநபர்கள் சிலர் சேதம் விளைவித்தமையை கண்டித்து அப்பகுதியிலுள்ள மக்கள் ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சம்பவத்தினால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து நிலவி வருகின்றமையினால் அதிகளவிலான படையினர் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அப்பகுதியிலுள்ள முஸ்லிம் கடைகள் மீதும் தாக்குதல் நடத்தப்படலாமென்ற காரணத்தினால் அக்கடைகளை மூடுமாறு பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
குறித்த மர்மநபர்களின் தாக்குதலின் பின்னணியில், இனவாத செயற்பாட்டின் ஊடாக ஆதாயம் தேட முனையும் தீய சக்திகள் இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கட்டுவப்பிட்டிய பிரசேத்திலுள்ள தேவாலயமொன்றிலும் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி தற்கொலை தாக்குதல் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment