வத்தளை பகுதியில் Methamphetamine (மெதம்பிட்டமைன்) மற்றும் ஹஷீஷ் போதைப்பொருளுடன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து இச்சந்தேகநபர் நேற்று (28) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து புனித செபஸ்தியன் மாவத்தை, மாட்டாகொட, ஹெந்தல, வத்தளை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிற்கு முன்பாகவுள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்றை சோதனைக்கு உட்படுத்தியபோது, ஒரு கிலோ 157 கிராம் Methamphetamine (மெதம்பிட்டமைன்) போதைப்பொருள் மற்றும் 413 கிராம் ஹஷீஷ் போதைப்பொருளுடன் இச்சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த வீட்டில் வசிக்கும் 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சந்தேகநபரிடமிருந்து போதைப்பொருள், வியாபார மூலம் கிடைத்த 124,980.00 பணம் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment