வௌிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட இரு பெண்கள் உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெண் ஒருவரும் மற்றுமொரு நபரும் மாலபே பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் ஜப்பானில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகத் தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனிடையே, இத்தாலியில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி 21 இலட்சம் ரூபா பெற்றுக்கொண்ட பெண் ஒருவர் கம்பஹா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக 6 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, துபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பணம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் பொரளை பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு எதிராக 10 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment