எச்.எம்.எம்.பர்ஸான்
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை விசேட தேவையுடையோர் மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலை தொடர்பில் அப் பிரதேச முக்கியஸ்தர்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
பாடசாலையின் தலைவர் மௌலவி எஸ்.எச்.அறபாத் ஸஹ்வி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காவத்தமுனை பகுதியிலுள்ள பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், விளையாட்டுக் கழக மற்றும் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் போன்றோர் கலந்து கொண்டிருந்தனர்.
கல்குடா பகுதியிலுள்ள விசேட தேவையுடைய மாணவர்களைப் பராமரிக்கின்ற குறித்த பாடசாலையை தொய்வின்றி தொடர்ந்தும் சிறப்பாக மேற்கொண்டு செல்வதற்கு வருகை தந்தோரிடம் ஆலோசனைகள் கேட்கப்பட்டன.
குறித்த பாடசாலையினை சிறப்பாக முன்னெடுத்துச் செல்வதற்கு நிருவாகத்தினர்களுக்கு பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக அங்கு வருகை தந்த முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவர் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி, விசேட தேவையுடையோர் பாடசாலையின் பணிப்பாளர் ஏ.எல்.நெய்னா முகம்மட், பிரதேச சபை உறுப்பினர் எம்.பீ.எம்.ஜஃபர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment