நாட்டின் பல பாகங்களில் வரட்சியான காலநிலை நிலவுவதால், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மின்னுற்பத்தி நிலையங்களை அண்டிய பிரதேசங்களில் நிலவும் வரட்சி காரணமாக, மின்னுற்பத்திக்கான நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வரட்சியான காலநிலை நிலவும் பிரதேசங்களில் வரட்சி குறைந்து, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment