இலங்கையை வந்தடைந்தார் தாவூத் போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 28, 2019

இலங்கையை வந்தடைந்தார் தாவூத் போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர்

தாவூத் போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவரும் 53ஆவது அல் தாய் அல் முத்லக்குமான செய்யிதினா முபத்தல் சைபுத்தீன் நேற்று இலங்கைக்கு விஜயம் செய்தார். 

அசரா முபாரக்கா மாநாட்டில் பங்கேற்று பிரதான பிரசங்கம் நடத்துவதற்காக இலங்கை வந்துள்ள அவருக்கு விமான நிலையத்தில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் அமைச்சர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற புர்ஹானி நிகழ்வில் பங்கேற்ற அவருக்கு ஆயிரக்கணக்கான தாவூத் போரா சமூகத்தினர் பெருவரவேற்பு வழங்கினார்கள். 

இங்கு கருத்துத் தெரிவித்த அவர், தன்னை அரச விருந்தினராக இலங்கைக்கு அழைப்பு விடுத்தது தொடர்பாக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நன்றி தெரிவித்தார். கொழும்பில் தங்கியிருக்கும் அவர் போரா சமூகத்தினருடன் மட்டுமன்றி ஏனைய சமூகத்தினரையும் சந்தித்து பேசவுள்ளார். 
அசரா போரா என்பது இஸ்லாமிய வருடம் ஆரம்பிப்பதற்கு முன்னரான 10 நாட்களை குறிப்பதோடு போரா நிகழ்வுகள் ஆகஸ்ட் 31ஆம் திகதி முதல் செப்டம்பர் 9ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது. 

உலகளாவிய ரீதியில் அமைந்துள்ள போரா நிலையங்கள் அசரா முபாரக்கா நிகழ்வை அனுஷ்டிக்கின்றன. இலங்கையில் நடைபெறும் அசரா முபாரக்கா நிகழ்வில் 40 நாடுகளைச் சேர்ந்த போராக்கள் கலந்து கொள்கின்றனர். 

பம்பலப்பிட்டி ஹூஸைன் பள்ளிவாசலில் நடைபெறும் இந்த அசரா முபாரக்கா நிகழ்வுக்காக பம்பலப்பிடிய பகுதியிலுள்ள ஹோட்டல்கள் மற்றும் தொடர்மாடிகள் முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வுக்கு உதவும் நோக்கத்துடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்கூட்டி இலங்கை வந்துள்ளனர். இதனையொட்டி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment