
எதிர்வரும் விடுமுறை நாட்களில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது குடிமக்களுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது.
தீவிரவாதிகள் எதிர்வரும் தினங்களில் சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தலாம் என அமெரிக்காவினால் விடுக்கப்பட்டுள்ள இந்த அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது குடிமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள சுற்றுலாத்தளங்கள், போக்குவரத்து நிலையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், விடுதிகள், அரச அலுவலகங்கள், வழிபாட்டுத்தலங்கள், பூங்காக்கள், உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், பிரமாண்டமாக நடத்தப்படும் விளையாட்டுகள் மற்றும் கலாசார நிகழ்வுகள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பிரதான பகுதிகள் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகலாம் என அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment