ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடத்தாமல் தடுக்க, இலங்கையில் மீண்டும் ஒரு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கவே அமெரிக்கா முயற்சித்து வருவதாக எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெற்றால் நிச்சயமாக தோல்வியடைவோம் என்பது அவர்களுக்குத் தெரியும்.
சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க, ரணில் எதிர்ப்பினை வெளியிட்டு வருகிறார். ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை அவரால் களமிறங்க முடியாது விட்டால், கருஜயசூரியவுக்கே அந்த வாய்ப்பை வழங்குவார்.
ஆனால், அடுத்து அமையவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்காவுக்கு சார்பான தரப்பு ஆட்சியமைக்க முடியாது போய்விட்டால், அந்நாட்டின் முகாம்களை இலங்கையில் அமைக்க முடியாது போய்விடும்.
இதனை அமெரிக்கா நன்றாக அறிந்துள்ளது. எனவே, அடுத்த ஜனாதிபதித் தேர்தலை எப்படியாவது இல்லாது செய்துவிட வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கமாக இருக்கிறது.
நாட்டில் ஏப்ரலில் ஏற்பட்டுத்தப்பட்ட, பதற்றமான சூழ்நிலையை மீண்டும் ஏற்படுத்துவதன் ஊடாக மட்டுமே தேர்தலை நடத்தாமல் தடுக்க முடியும். இதற்கு சஹ்ரான் போன்று இரண்டு மூன்று நபர்கள் இருந்தாலே போதும். இதற்காக வஹாப் அடிப்படைவாதத்தை மீண்டும் ஏற்படுத்தவும் அமெரிக்கா தயங்காது.
எனவே, அடுத்த இரண்டு - மூன்று மாதங்களுக்குள் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறாது என்று எம்மால் முழுமையாக நம்பிக்கை வைக்க முடியாது.
அப்படி நடந்தால், அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதைவிடுத்து, அனைவரும் ஒன்றினைந்து அலரி மாளிகை முற்றுகையிட தயாராகிக் கொள்ள வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment