முஸ்லிம் விவாக சட்ட திருத்தம் தொடர்பில் இன்று இறுதி முடிவெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பௌஸி தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, August 1, 2019

முஸ்லிம் விவாக சட்ட திருத்தம் தொடர்பில் இன்று இறுதி முடிவெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பௌஸி தெரிவிப்பு

முஸ்லிம் விவாக, விவாகரத்துச்சட்ட திருத்தம் தொடர்பில் இன்று வியாழக்கிழமை இறுதி முடிவெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எச்.எம். பௌஸி தெரிவித்தார். 

நேற்று பாராளுமன்றக் கட்டிடத்தில் இடம்பெற்ற குழுக்கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையிலான குழுவும், முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சலீம் மர்ஷுப் தலைமையிலான குழுவும் சமர்ப்பித்த அறிக்கைகளில் பெரும்பாலானவற்றுக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள போதிலும் காதி நீதிபதிகளாகப் பெண்களையும் நியமிக்கக்கோரும் விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இணக்கம் தெரிவிக்க மறுத்துவருவதால் நேற்றைய தினமும் இறுதித்தீர்மானம் எடுக்க முடியாது போனது. 

இன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் இறுதிப்பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவை எடுப்பதற்குத் தீர்மானித்ததாக அவர் கூறினார். 

எம்.ஏ.எம். நிலாம்

No comments:

Post a Comment