மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் இருதய நோய், வலிப்பு, நீரிழிவு, ஆஸ்துமா நோய், மற்றும் நுண்ணுயிர் கொல்லி (அன்ரிபையிட்) அவசர சிகிச்சைக்கு பாவிக்கும் மருந்துகள் உட்பட 45 மருந்துகள் வைத்தியசாலைகளில் தட்டுபாடு நிலவிவருகின்றது என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்க மட்டக்களப்பு, மட்டு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் சங்கம் ஒன்றிணைந்த ஊடகவியலாளர் மகாநாடு மட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலய மண்டபத்தில் இன்று (05) இடம்பெற்றது.
இதில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்க மட்டக்களப்பு செயலாளர் வைத்தியர் என்.சி.வி. காலகே, மட்டு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் சங்க செயலாளர் ரூபராஜன் மற்றும் வைத்தியர்கள் கலந்துகொண்டனர்.
நாடாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் மருந்து தட்டுப்பாடு தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. இதுவரை நாடளாவிய ரீதியில் தட்டுப்பாடு கூடிக் குறைந்து கொண்டிருந்தாலும் இப்பொழுது மருந்து தட்டுப்பாடு மிகலும் உச்ச கட்டமாக உள்ளது.
இருதய நோய், வலிப்பு, நீரிழிவு, ஆஸ்துமா நோய், மற்றும் நுண்ணுயிர் கொல்லி (அன்ரிபையிட்) அவசர சிகிச்சை, பாவிக்கும் மருந்துகள் உட்பட 45 அவசர சிகிச்சைக்காக பாவிக்கின்ற மருந்து, இருதய நோய்க்கு பாவிக்கும் அஸ்பிறின் போன்றவை மற்றும் பாவிக்கும் மருந்துகள் தட்டுப்பாடாக உள்ளது.
அதேவேளை, பாவனைக்கு என அனுப்பப்பட்டு பின்னர் தரம் குறைந்த மருந்து எனவும் மருந்து பாவனைக்கு உகந்தது அல்ல என அவற்றை மீளப் பெறப்பட்டுள்ளது.
பிராந்திய சுகாதார பணிப்பாளர் கீழ் உள்ள காத்தான்குடி வைத்தியசாலையில் நோவுக்கு பாவிக்கின்ற மருந்து, சிறுநீர் நோய்க்கு பாவிக்கும் சில மருந்துகள் மற்றும் செங்கலடி வைத்தியசாலையில் ஆஸ்துமாவிற்கு பாவிக்கின்ற மருந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் நுண்ணுயிர் கொல்லி (அன்ரிபையிட்) மருந்துக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த மருந்து தட்டுப்பாடு தொடர்பாக அமைச்சுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். எனவே, அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு நிருபர் சரவணன்
No comments:
Post a Comment