31 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற தலைமைத்துவத்திற்கு ஆதரவு - இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 31, 2019

31 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற தலைமைத்துவத்திற்கு ஆதரவு - இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

எமது நாட்டிற்கு நல்லதொரு தலைமைத்துவத்தை வழங்ககூடிய ஒரு அமைப்புக்கே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

நேற்று (30) மாலை கொட்டகலை சீ.எல்.எப். கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதி செயலாளருமான மறுதபாண்டி ராமேஸ்வரன், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான பி. சக்திவேல், எஸ். பிலிப் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் பி. சக்திவேல், மலையக மக்களுக்கு தேவையான 31 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற தலைமைத்துவத்திற்கு இ.தொ.கா.வின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும். 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் 106 வது ஜனன தினத்தை முன்னிட்டு எமது தேசிய சபை ஒன்று கூடியது. 

இதன்போது இரண்டு முக்கியமான விடயங்கள் பற்றி பேசபட்டது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி பொதுச் செயலாளராக இருந்த ஜீவன் தொண்டமான் இளைஞர் அணியின் பொதுச் செயலாளராக தெரிவு செய்யபட்டார். 

தற்பொழுது நாட்டில் இடம்பெறுகின்ற அரசியல் சூழ்நிலை தொடர்பில் தேசிய சபையில் ஆராயப்பட்ட போது இரண்டு கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறது, ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் யார் என்பது எமக்கு இதுவரையிலும் தெரியாது. 

எனவே, ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்களை அனைத்து கட்சிகளும் அறிவித்ததை தொடர்ந்து எமது தேசிய சபையின் ஊடாக மத்திய மாகாண முன்னாள் அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரனும் மற்றும் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் ஊடாக அரசியல் ரீதியாக எமது தேசிய சபை பல்வேறு விடயங்களை ஆய்வு செய்து, எமது உப தலைவர்கள் ஊடாக எமது தலைவருக்கு அறிவித்ததை அடுத்து மேலதிக நடவடிக்கையினை எமது தலைவர் மேற்கொள்வார். 

இன்று எமது நாட்டில் பல்வேறு கட்சிகள் இருந்தாலும் நாங்கள் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள், எம்மாள் ஜனாதிபதியாக வரமுடியாது. ஒரு பெருபான்மை கட்சியினை சார்ந்த உறுப்பினர் தான் ஜனாதிபதியாக வரமுடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

(மலையக நிருபர் சதீஷ்குமார்)

No comments:

Post a Comment