இஸ்லாமிய புது வருட தலைப்பிறை தென்படவில்லை - துல்ஹஜ் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய முடிவு - News View

About Us

About Us

Breaking

Saturday, August 31, 2019

இஸ்லாமிய புது வருட தலைப்பிறை தென்படவில்லை - துல்ஹஜ் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய முடிவு

இஸ்லாமிய வருடத்தின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் தலைப்பிறை இன்றையதினம் (31) நாட்டின் எப்பாகத்திலும் தென்படவில்லை என, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய நிகழும் ஹிஜ்ரி 1440 இஸ்லாமிய வருடத்தின் இறுதி மாதமான துல்ஹஜ் மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக உலமா சபை அறிவித்துள்ளது.

முஹர்ரம் தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று (31) மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்றது. இதன் போதே குறித்த தீர்மானங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் இந்நிகழ்வில் சமூகமளித்திருந்தனர்.

No comments:

Post a Comment