காரணம் கண்டறியப்படாத தொற்றா நோயான சிறுநீரக நோய் மற்றும் தொற்றா நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்காக வீடுகளிலிருந்தே (Home Dialysis) இரத்த சுத்திகரிப்பு அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ண தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டு தேசிய வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது தொற்றா நோயான சிறுநீரக நோயின் பாதிப்பு தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்தது. அத்தோடு வீடுகளிலேயே சுயமாக செயற்படுத்தக்கூடிய இரத்த சுத்திகரிப்பு (Home Dialysis) இயந்திரங்களை வழங்குவதற்காக 500 மில்லியன் ரூபாவுக்கான முன்மொழிவு இடம்பெற்றுள்ளது.
தற்பொழுது இதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக இந்த இயந்திரங்களை பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவை அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
வீட்டிலேயே இந்த தன்னியக்க இரத்த சுத்திகரிப்பு செயற்பாடுகளை மிகவும் பாதுகாப்பாக மேற்கொள்ள முடியும். இதே போன்று இந்த வேலைத்திட்டத்தின் மூலம் 24 மணித்தியாலமும் தெடர்பு மத்திய நிலையம் மற்றும் சேவை மத்திய நிலையத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் வைத்திய குழுக்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள முடியும்.
நோயாளருக்கு சிகிச்சையளிக்கப்படும் அதே வேளையில் வைத்திய உபகரணங்கள் மூலம் நோயாளர்களின் உடல்நிலையை அவதானிப்பதற்கும் வைத்தியர்களினால் முடியும்.
நேரடியாக தன்னியக்க கருவியின் மூலம் இயந்திரத்தில் தொடர்பு பட்ட சிகிச்சையை பூர்த்தி செய்யக்கூடிய ஆற்றல் மற்றும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நோயாளர்களுக்கு இயந்திரத்துடன் தொடர்பாடல்களை மேற்கொள்ளக்கூடிய ஆற்றல் போன்ற முக்கியமான விடயங்கள் இந்த திட்டத்துக்குட்பட்டது.
இந்த இரத்த சுத்திகரிப்பு செயற்பாட்டின் மூலம் நோயாளர்களின் வாழ்நாள் அதிகரிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் நோயாளர்களுக்கு சிறந்த வாழ்க்கை நிலை கிடைப்பதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
ஒரு நோயாளருக்காக மாதத்துக்கு 103740 ரூபா செலவாகின்றது. இந்த வருடத்தில் இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
No comments:
Post a Comment